திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கவி பிரகாஷ்(21), கேரளாவைச் சேர்ந்த முகமது ஆதில்(21), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோஹித் சந்திரா(21) உள்பட 14 மாணவர்கள் இன்று காலை 7 மணி அளவில் பெசன்ட் நகர் கடலுக்கு வந்தனர். பின்னர் பிரகாஷ், ரோஹித் சந்திரா, முகமது ஆதில் ஆகிய 3 மாணவர்கள் மட்டும் கவர்னர் கெஸ்ட் ஹவுஸ் அருகே கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி மூன்று பேரும் ஆழத்திற்கு இழுத்து செல்லபட்டனர். இதை பார்த்து உடன் வந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர்.
அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் வந்து உடனடியாக கடலில் இறங்கி பிரகாஷ் மற்றும் முகமது ஆதில் ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் பிரகாஷ் இறந்து விட்டார். முகமது ஆதில் மயக்க நிலையில் இருந்தார். அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் போலீசார் மாணவன் பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாயமான ரோஹித்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.