Skip to content

3 தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய பார்க்கிங்..

  • by Authour

Image

தமிழகத்தில் இருந்து Parking திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை திரு. எம். எஸ். பாஸ்கர் பெற்றுள்ளார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை அப்படத்தின் தயாரிப்பாளர் திரு. சினிஷ் வென்றுள்ளார். சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்ற அப்படத்தின் இயக்குநர் திரு. ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.  சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. ஜவான் இந்தி படத்திற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் ‘வாத்தி’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஜிவி பிரகாஷ்க்கு வழங்கப்பட்டது. திரைத்துறைக்கு வாழ்நாள் பங்களிப்பு செய்ததற்காக மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை Mrs. Chatterjee vs Nirway என்ற இந்தி படட்திற்காக ராணு முகர்ஜி பெற்றுள்ளார். சிறந்த குணச்சித்திர நடிகையாக உள்ளொழுக்கு படத்திற்காக ஊர்வசிக்கு வழங்கப்பட்டது.

error: Content is protected !!