Skip to content

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன்-பவானி தம்பதியரின் 3 வயது மகன் சஞ்சீவ் மித்ரன், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

நீண்ட நேரமாகியும் குழந்தையைக் காணாததால் பெற்றோர் தேடியபோது, சிறுவன் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கிக் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!