கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாவட்டம் மையம் சார்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம்.
தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதி படி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 10 லட்சம்

5 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டும் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாவட்ட மையம் சார்பில் 35க்கும் மேற்ப்பட்டோர் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலா மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர் . மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

