தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. காலியாக இருந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு ஆர்.சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்பியாக எஸ்.விமலா, வேலூர் எஸ்பியாக ஏ.மயில்வாகணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் எஸ்பியாக விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம், தேனி எஸ்பியாக புக்ய ஸ்னேக பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுஜித்குமார் ஐபிஎஸ் கோயம்பேடு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் எஸ்பியாக சியாமளாதேவி, கரூர் எஸ்பியாக கே.ஜோஷ் தங்கையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்பியாக ஜி.எஸ்.மாதவன், தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக அர.அருளரசு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மஹேந்தர் குமார் ரத்தோட் ஐபிஎஸ் காவல்துறை தலைமையக ஐஜியாக நியமனம் செயப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய தர்மராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடம் மாற்றம்
- by Authour
