Skip to content

திருநங்கையர் தின விருதுக்கு விண்ணப்பிக்க…. திருச்சி கலெக்டர் வேண்டுகோள்….

  • by Authour

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் திருநங்கைகள் இச்சமுகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்லேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையிலும் மற்ற திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையர் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15ம் தேதியன்று திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருது வழங்கப்படும்.

இவ்விருதானது ரூ1,00,000த்துடன்  சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருப்பவராகவும், குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும்.

திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது”என்ற விதிமுறைகளை கொண்டு கீழ்க்காணும் விபரப்படி மீண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. பொருளடக்கம் மற்றும் பக்க எண், உயர்தரவு (Bio Data) மற்றும் Pass Port size Photes -2, மாவட்ட ஆட்சித்தலைவரின் பரிந்துரை கடிதம்: மாவட்ட சமூக நல அலுவலரின் பரிந்துரை கடிதம். சுய சரிதை, தனியரை பற்றிய விபரம் (ஒரு பக்க அளவில்) Soft Copy and Hard Copy, விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விபரம்/விருதின் பெயர் / யாரிடமிருந்து பெற்றது மற்றும் விருது பெற்ற வருடம் ), சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவையை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு.

சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின் / சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், சமூக பணியாளரின் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை. என்பதற்கான சான்று, இணைப்பு – படிவம் தமிழில் மருதம் எழுத்துருவில்) முழுமையாக பூர்த்தி செய்து (Soft Copy and Hard Copy) அனுப்பப்பட வேண்டும். கையேடு (Booklet) – தமிழில் அச்சு (Print) செய்யப்பட்டு 2 நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 28.2.2023, மேலும் விபரங்கள் பெற அலுவலக தொலைபேசி எண்: 0431 2413796 என்ற என்னில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர்  பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!