திருச்சி ராம்ஜிநகர் மில்க் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ராம்ஜி நகர் மில்காலனி பகுதியை சேர்ந்த கோமதி (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று திருச்சி அம்பேத்கர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியை சேர்ந்த ரவுடி சூர்யா பிரகாஷ் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 போத மாத்திரைகள் இரண்டு ஊசிகள் ரூபாய் 450 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த முகமது செலார்ஷா( 23) , நித்தின் (25) ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து 8போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.

