வீட்டு வாசலில் தெளிக்க வைக்கப்பட்டிருந்த சாணி பவுடரை குடித்து நான்கு குழந்தைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த போஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் சுபா தம்பதியினரின் குழந்தைகளான சான்சியா ஸ்ரீ (4) மற்றும் டஷ்வந்(2) மற்றும் அதேபோல பக்கத்து வீட்டான காளியப்பன் மற்றும் சௌந்தர்யா தம்பதியினரின் கயல்விழி (4) லித்திகா ஸ்ரீ (3) உள்ளிட்ட நான்கு குழந்தைகளும் வீட்டின் வெளியே

விளையாடிக் கொண்டிருந்தது. அது வீட்டு வாசலுக்கு தெளிக்க சாணி பவுடரை பக்கெட்டில் கலக்கி வைத்திருந்தனர். அதனை அறியாமல் நான்கு குழந்தைகளும் டம்ளரில் எடுத்துக் குடித்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர்கள் உடனடியாக நான்கு பேரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் கொஞ்சமாக சாணி பவுடரை குடித்ததன் காரணமாக எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்தார். வாசலுக்கு தெளிக்க வைக்கப்பட்டிருந்த சாணி பவுடரை குடித்து நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

