Skip to content

கார், பைக் மீது லாரி மோதல்… 4 பேர் பலி

தர்மபரி மாவட்டம் தொப்பூர் அருகே சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!