தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.7.2023) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நான்கு புதிய வங்கிக் கிளைகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மருத்துவர் ந. சுப்பையன், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ம. அந்தோணிசாமி ஜான் பீட்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு வங்கியின் 4 புதிய கிளைகள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…
- by Authour
