Skip to content

போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார், மொட்டகோபுரம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அதில் ஆத்திரமடைந்த அவர்கள் வாள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து போலீசார் அந்த 4 பேரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மாப்பிள்ளையூரணி மேற்கு காமராஜ்நகரை சேர்ந்த மனோவரோஸ் (27), கட்டிட தொழிலாளி கார்த்திக்(23), பூப்பாண்டியபுரத்தைச் சேர்ந்த வெம்பன்ராஜா(19) மற்றும் ராமதாஸ்நகரைச் சேர்ந்த சரவணக்குமார்(23) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்த தாளமுத்துநகர் போலீசார், வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!