கஞ்சா விற்ற 4 பேர் கைது
திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர்பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது திருச்சி கே கே நகர் எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 25) என்ற வாலிபர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் சக்திவேலை கைது செய்து அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று திருச்சி முதலியார் சத்திரம் டீ கடை அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சங்கரன் பிள்ளை ரோடு பகுதியை சேர்ந்த பிராங்கிலின் நிக்சன் ராஜ் (வயது 25) என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளார்.
மேலும் திருச்சி குட்செட் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மேல தேவதானம் பகுதியை சேர்ந்த மதன்குமார் (வயது 24) மதுரை ரோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 27)ஆகிய இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
ஒருவருக்கு அரிவாள் வெட்டு… 4 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சி அரியமங்கலம் கணபதி நகர சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45) இவர் நேற்று அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து உள்ளார்.இதனைப் பார்த்த கார்த்திகேயன் அஜித்திடம் ஏன் இவ்வளவு வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிவருகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் கார்த்திகேயன் அஜித் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து அஜித் தனக்குத் தெரிந்த அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ராகவேந்திரன் (வயது 27) பழனி தீபக் (வயது 23) யுவராஜ் (வயது 27) ஆகியோரை அழைத்து வந்து கார்த்திகேயனிடம் மீண்டும் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த கார்த்திகேயன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கார்த்திகேயன் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் அஜித், ராகவேந்திரன், பழனி தீபக், யுவராஜ் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
அச்சக தொழிலாளர் மீது தாக்குதல் . 2 சிறுவர்கள் கைது
திருச்சி இபி ரோடு கல்மந்தை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36) இவர் அச்சகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது வேலையை முடித்துக் கொண்டு இரவு வீட்டுக்கு வந்து தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.அப்பொழுது வீட்டின் அருகில் உள்ள கட்டிடத்தில் வசித்து வரும் 16, 17 வயது சிறுவர்கள் 2 பேர் பிரகாஷிடம் தகராறு செய்து இருசக்கர வாகனத்தை இங்கு நிறுத்தக்கூடாது என்று கூறி சத்தம் போட்டு உள்ளனர். இதனால் பிரகாஷ் மற்றும் இரண்டு சிறுவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இரண்டு சிறுவர்களும் அவரது ஆதரவாளர்கள் ஹரிஹரன், ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து பிரகாசை கெட்ட வார்த்தையால் திட்டி அவரது கன்னத்தில் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பிரகாஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பிரகாஷ் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 16,17 வயது சிறுவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு உதவியாக இருந்த ஹரிஹரன் (வயது 18) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்டாலின் என்பவரை தேடி வருகின்றனர்.