போதை மாத்திரைகள்,புகையிலை விற்ற 4 பேர் கைது
திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் அந்தந்த போலீஸ் சரகங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில்
திருச்சி கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இ.பி ரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே
போதை மாத்திரை விற்ற லால்குடி பெருவள நல்லூர் பகுதியை சேர்ந்த பாலாஜி ( 22 ), பாலக்கரை கோரிமேடு தெருவை சேர்ந்த மகேந்திரன் (25)
கைது செய்து அவர்களிடமிருந்த 30 போதை மாத்திரைகள், ஊசிகளை போலீசார் பாலக்கரை பறிமுதல் செய்தனர்.
புகையிலைப் பொருட்கள் விற்ற 2 பேர் கைது
திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொன்மலை, ஏர்போர்ட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் . அப்போது பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே புகையிலை விற்ற மணப்பாறை மணியகுறிச்சி பகுதியை சேர்ந்த வினோத் (26),ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு அருகே புகையிலை விற்ற சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த அப்துல் ஹக்கீம் ( 30 )
ஆகிய இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 270 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.
லாட்டரி விற்ற 4 பேர் கைது
இதேபோல் திருச்சி அரியமங்கலம் தில்லை நகர் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் இந்த சோதனையில் அரியமங்கலம் சீனிவாசன் நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விட்டதாக மீனாட்சி சுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்தனர் .அவரிடம் இருந்து அதற்கான ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது .இதே போல் தில்லை நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக சையது ஹவுஸ், அப்சாலி, ஜாபர் சாதிக் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அமீனா காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (48) பெயிண்டர். இவர் எடமலைப் பட்டி புதூர் அண்ணா நகர் பகுதியில் ஒரு பில்டிங் முதல் தளத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார் .
அப்பொழுது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

