காட்பாடி அடுத்த மேல்பாடி அம்மார்பள்ளி ஊராட்சியில் புதியதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அப்பள்ளங்களில் மழை தேங்கியுள்ளது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி குப்பன் என்பவரின் 4 வயதுடைய இரண்டாவது மகன் அன்பு (4) அங்கு பள்ளி முடிந்து வரும் தனது அக்காவுக்காக காத்திருந்து விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சிறுவன் அனுபுவை சடமாக மீட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த மேல்பாடி காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அன்பு தினமும் தனது அக்கா பள்ளி முடிந்து வருவதை ஆவளோடு எதிர்பார்த்துகொண்டிருப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இன்று தான் பள்ளி முடிந்து வந்து பார்த்த போது தனது தம்பியை திண்ணை மீது பேச்சு மூச்சு இல்லாமல் படுக்கவைக்கப்பட்டி ருப்பதை பார்த்த அச்சிறுமி அன்புக்கு என்ன ஆனது என்று கூட தெரியாமல் தொட்டுப்பார்த்து அவனிடம் பேச முயலும் ஒற்றை புகைபடம் காண்போரின் நெஞ்சை ரணமாக்கியது.

