பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் கைது
பொன்மலை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர்களின் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி பொன்மலை பகுதியில் பொன்மலை போலீசார் வழக்கம் போல ரோந்து பணி சென்றனர். அப்போது சில வாலிபர்கள் அங்கு கத்தி,மிளகாய் பொடி,கயிறு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு கூடி நின்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த நான்கு வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் அவர்கள் ஆலத்தூர் பூங்கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த் ( 30 ), சத்தியசீலன் (30) மணிகண்டன் ( 23 ) மற்றும் திருச்சி மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த வெற்றிவேல் ( 35 ) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு பட்டாகத்தி ,ஒரு கத்தி ஒரு கயிறு மற்றும் இரண்டு மிளகாய் தூள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
4 இடங்களில் வழிப்பறி கொள்ளை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வேங்கூரைச் சேர்ந்தவர் அழகர்சாமி (46). இவர் பெல்லில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மத்திய பேருந்து நிலையத்தில் கோவை செல்வதற்காக பஸ் ஏற நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸ் கார்த்திக் ( 25 )மற்றும் சந்தோஷ் (20) ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்தவர் அன்பழகன் ( 23. ) இவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் துறைமுகத்தில் மேற்பார்வையாளர் வேலை செய்து வருகிறார் .இவர் நேற்று சொந்த வேலை காரணமாக திருச்சி வந்தார். மன்னார்புரம் சேவை சாலை வழியாக திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு நடந்து சென்ற போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த சிலர் இவரை வழிமறித்து இவரிடம் இருந்த செல்போன் மற்றும் வெள்ளி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர் .இது குறித்து எடமலைப்பட்டி புதூர் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திருச்சி மாவட்டம் ஆலத்தூர் பூங்குயில் தெருவை சேர்ந்தவர் தமிழரசி (54). இவர் மேல கல்கண்டார் கோட்டை மாருதி நகர் வழியாக வீட்டுக்கு சென்றார் அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தி காட்டி மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இது குறித்து பொன்மலை போலீசார் அரியமங்கலம் மேல அம்பிகா புரத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி லோகநாதன் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் முகமது கவுஸ் ( 66 ) இவர் சம்பவத்தன்று தென்னூர் கே .எம் .சி .சாலை வழியாக வீட்டுக்கு சென்றார் .அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த சில வாலிபர்கள் இவரிடம் முகவரி விசாரிப்பது போல் அவர் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர் இது குறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியைச் சேர்ந்த சிறுவனை பிடித்து விசாரிக்கின்றனர். மேலும் சிறுவனுடன் இருந்த உறையூர் காந்திபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் ( 22 ) மற்றும் பதின் ராஜ் (18 )ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
ஆட்டோ டிரைவர் மனைவி உள்பட 2 பேர் மாயம்
திருச்சி பெரிய மிளகுபாறை கள்ளர் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி ( 52 )இவரது மகன் வெங்கடேஷ் (26 ?மனநலம் பாதிக்கப்பட்டவர் .சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற வெங்கடேஷ் மீண்டும் விடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
தில்லைநகர் ரஹ்மானிய புரத்தைச் சேர்ந்தவர் முகமது கனி (47 ) .ஆட்டோ டிரைவர் இவரது மனைவி பிரம்மல் ( 37 ) இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக கடந்த வீட்டை விட்டு சென்ற பிரம்மல் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை .இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சாலையை கடக்க முயன்றவர் விபத்தில் பலி..
திருச்சி அரியமங்கலம் அடைக்கல மாதா தெருவை சேர்ந்தவர் சோலை ( 59 ) இவர் சம்பவத்தன்று திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சஞ்சீவி நகர் அருகே சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக அதிவேகமாக வந்த நான்குசக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சோலையை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார் .இது குறித்து வடக்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்றதாக 3 வாலிபர்கள் கைது
திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தி பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் ஜோசப் ( 23 ) என்ற வாலிபரை கைது செய்தனர்.
இதேபோல் பாலக்கரை ஆலம் தெரு ஜங்ஷன் அருகே கஞ்சா விற்ற பாலக்கரை சந்தியாகப்பர் கோயில் தெருவை சேர்ந்த ராபர்ட் பிரின்சிலி ( 27 ) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் குட்செட் சாலை அருகே கஞ்சா விற்ற பாலக்கரை காஜா பேட்டை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் ( 20 )என்ற வாலிபரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல் திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட், புத்தூர் அரசு மருத்துவமனை பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் அதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.