திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கத்தார், தோஹா வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் மற்றும் வெளிநாட்டு விலங்குகள், பறவைகள், போதைப்பொருள் ஹவாலா பணத்தை கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.இந்த நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லவிருந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது 2 பயணிகள் ட்ராலி பேக்கில் 403 இந்திய நட்சத்திர ஆமைகளை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி ஏர்போட்டில் 403 இந்திய நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.. 2 பேரிடம் விசாரணை
- by Authour
