Skip to content

4வது தேசிய பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி…கோவையில் ஆண்கள்-பெண்கள் பங்கேற்பு

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கம், இந்திய, ஆசிய மற்றும் உலக பாரா த்ரோபால் கூட்டமைப்புகள் ஆகியவை இணைந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற 4-வது தேசிய பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் தொடங்கியது.

இந்த சாம்பியன்ஷிப், மறைந்த டாக்டர் பி. கிருஷ்ணானந்தாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடத்தப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியில், 12 மாநிலங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். ஜம்மு & காஷ்மீர், உத்தரகண்ட், ஆந்திரா, பீகார், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரபிரதேசம் ஆகிய அணிகள் கலந்து கொண்டன.மூன்று நாட்கள் கடுமையான போட்டிகளில் வீரர்கள் தங்கள் மன உறுதி, குழுப் பணி, திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிறைவு விழாவில் திட்டத் தலைவர் மற்றும் RI மாவட்டம் 3206 உறுப்பினர் தலைவர் Rtn. MD A. காட்வின் மரியா விசுவாசம், “மாற்றுத்திறனாளிகளின திறமைக்கு எந்த குறைபாடில்லை என்பதை நிரூபித்ததே இந்த சாம்பியன்ஷிப் மிகப்பெரிய வெற்றி” என்றார்.தலைமை விருந்தினராக RI மாவட்டம் 3206 ரோட்டரி அறக்கட்டளைத் தலைவர் Rtn. PDG S. ராஜசேகர் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் RI மாவட்டம் 3206 இயக்குநர் Rtn. MD K.K. சுக், உதவி ஆளுநர் Rtn. MPHF V. ராஜா மகேந்திரன், குழு ஆளுநரின் பிரதிநிதிகள் Rtn. MPHF M. பிரேம்குமார், Rtn. CRV ஸ்ரீநாத், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் தலைவர் Rtn. CRV ஸ்ரீநாத், செயலாளர் Rtn. S. விக்ரம் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் பாரதி கிருஷ்ண குமார், டாக்டர் வி. ஆல்பர்ட் பிரேம் குமார், டாக்டர் ஷரன், டாக்டர் சி. ஜெயபிரபா, திரு. தினேஷ் குமார், திருமதி தீபா மோகன்ராஜ், திருமதி ஸ்வர்ணலதா ஜே. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சில மாநிலங்களில் தொடங்கிய பாரா த்ரோபால், இன்று 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலும், 21 சர்வதேச நாடுகளிலும் பரவியுள்ளது. சமீபத்தில் இந்திய வீரர்கள் தாய்லாந்து மற்றும் ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

error: Content is protected !!