கரூரில் கடந்த செப்டம்பர் 27 தேதி நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தைக் குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விசாரணையின் இன்று கரூர் அரசுமருத்துவமனைக்கு உட்பட்ட 5 அரசு மருத்துவர்கள் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆவணங்களுடன் ஆஜராகினர். இவர்கள் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உடற்கூறு (போஸ்ட் மார்டம்) ஆய்வு செய்ததும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததும் உள்ளிட்ட முக்கிய காரணங்களை விசாரிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காவல் உதவி ஆய்வாளர் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். இச்சம்பவத்துக்குப் பிறகு கடந்த சில தினங்களாக 10-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விரிவாக விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

