Skip to content

நேருக்குநேர் மோதிய கார்கள்…குழந்தைகள் உள்பட 5 பேர் பலி…

  • by Authour

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிக்கஹோசல்லி கிராமத்தைச்சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று ஆந்திர மாநிலம் மந்திராலயம் ராகவேந்திர சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று சென்றனர். அங்கு தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு காரில் நேற்றிரவு புறப்பட்டனர். இவர்கள் கார் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் எம்மிகனூர் அடுத்த கோடேகல் கிராமத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் சென்றது.

அப்போது, எதிரே வந்த காரும், கர்நாடக பக்தர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் கர்நாடக பக்தர்கள் வந்த கார் நிலை தடுமாறி அருகே உள்ள பள்ளத்தில் சென்று இறங்கியது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது. அதில் இருந்த 2 குழந்தைகள் உள்பட சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மற்றொரு காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். தகவறிந்த போலீசார் விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பலியான 5பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!