அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்சிபெருமாள் கிராமத்தில் வசந்தா என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 14.02.2025 அன்று வேலைக்கு செல்வதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். மதியம் வீடு திரும்பி பார்த்தபோது அவரின் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டடு 48 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், மேலும் ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடு போனது. இதுகுறித்து வசந்தா 14.02.2025 அன்று உடையார்பாளையம் காவல் நிலையம் ஆஜராகி அளித்த புகார் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் சுமதி வழக்கு பதிவு செய்தார். இதனையடுத்து அரியலூர்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S. உத்தரவின் படி, ஜெயங்கொண்ட உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சீராளன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் புலன் விசாரணை செய்து வந்தனர்.
புலன் விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சண்முகநாதன் (27), மற்றும் மணிக்காளை (29), சிவகாசி மாவட்டத்தை சேர்ந்த அழகு பாண்டி (24), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனசிங் (22), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (24) ஆகிய ஐந்து நபர்களும் இந்த திருட்டு சமத்துவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடையார்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் இந்த 5 நபர்களையும் மதுரை அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 37 சவரன் தங்க நகைகள், 430 கிராம் வெள்ளி, 40 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் திருட்டுக்கு உபயோகித்த கார் முதலியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஐந்து பேரையும் உடையார்பாளையம் காவல்துறையினர், செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிமன்ற உத்தரவின் படி ஐந்து பேரையும் காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் சிறையில் அடைத்தனர்.

