Skip to content

அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ஐந்து காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து திருச்சி டிஐஜி வருண் குமார் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மத்திய மண்டல டிஐஜி வருண்குமார் என்று பிறப்பித்துள்ள உத்தரவில், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் அரியலூர் நகர காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் உதயகுமார் திருச்சி ஜிவி புரம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் நகர காவல் ஆய்வாளர் சந்திர மோகன் மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் நடராஜன் அரியலூர் காவல் நிலையம் 2க்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் காவல் நிலையம் 2 ஆய்வாளர் வேலுச்சாமி ஆண்டிமடம் காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி ரேஞ்ச் வி ஆர் இல் பணியாற்றிய ஆய்வாளர் இசைவாணி அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!