தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி மாதம் 4 மற்றும் 5-ம் தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்களாகப் பணியாற்ற உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் மாநில உள்துறை செயலாளர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் அதிகாரிகள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இக்கூட்டத்திற்குப் பிறகு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

