தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் இரவு பெய்த மழை காரணமாக அங்குள்ள 2 சிமெண்ட் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதனால் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை துண்டித்து வீடுகளுக்கு மட்டும் இணைப்பு கொடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை இப்பகுதியில் உள்ள இரும்பு மின் கம்பத்தின் அருகே அப்குதியைச் சேர்ந்தவ ஜமித்ரா (5) மற்றும் பிரதிதா(9) ஆகிய இரு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. மின்கம்பம் சாய்ந்ததில் ஏற்பட்ட மின் கசிவால் இரு குழந்தைகள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சிறுமிகள் மின் கம்பத்தின் அடியில் சிக்கிக் கொண்டிருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மீட்டனர். இதில் ஜமித்ரா சடலமாக மீட்கப்பட்டார். பிரதிதா மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஊத்துமலை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மின்சாரம் பாய்ந்து 5வயது குழந்தை பலி
- by Authour
