Skip to content

திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:   தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை முதல்வர் சரி செய்ய வேண்டும்.  காவல்துறை முதல்வர் கையில் தான் உள்ளது.  ஆணவ கொலைகளுக்கு காரணம் சாதிவெறி தான்.  இது ஆட்சியாளர்களின் விஷயம் அல்ல.  திமுக ஆட்சியில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது.  திமுக ஆட்சிக்கு எத்தனை மார்க் என்று கேட்கிறீர்கள் 50 மார்க் கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!