5 போட்டிகளில் ஆட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று உள்ளது. இதுவரை 4 போட்டிகள் நடந்துள்ளது. இதில் 2 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 1 போட்டியில் வென்றது. 1 போட்டி டிராவில் முடிந்தது. நாளை 5வது இறுதிப்போட்டி தொடங்குகிறது. இது இந்திய அணியை பொறுத்தவரை முக்கியமான போட்டியாகும்.
5வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை டிரா செய்து விடலாம். எனவே இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என முனைப்பு காட்டும். அதே நேரத்தில் போட்டி டிரா ஆனால் கூட இங்கிலாந்து தொடரை வென்று விடும். இந்த நிலையில் நாளை 5வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்தியாவின் துணை கேப்டன் பண்ட் காயம் காரணமாக விலகி விட்டார்.
இதுபோல இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தோள்பட்டை காயம் காரணமாக நாளைய போட்டியில் ஆட மாட்டார். அவருக்கு பதில் ஆல்லிபோப் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவார். பந்து வீச்சாளர் ஆர்ச்சரும் நாளைய போட்டியில் இடம் பெறவில்லை.
இங்கிலாந்தின் 2 முக்கிய ஆட்டக்காரர்கள் நாளை விளையாடாதது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.