Skip to content

கஞ்சா விற்ற 6 பேர் கைது.. வாலிபர் மாயம்… திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது..

திருச்சி முடுக்குபட்டி விநாயகர் கோவில் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்தாயுமான் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது முடுக்கு பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30)என்ற வாலிபர் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 75 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போன்று திருச்சி கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் டீ ஸ்டால் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 21)என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி பாலக்கரை காஜா பேட்டை அரச மரம் பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த  ஜஸ்டின் ஜேசுராஜ் (வயது 26) காஜா பேட்டை அண்ணா நகரை சேர்ந்த ஆஷிக் (வயது 20) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று பாலக்கரை கீழப்புதூர் டீக்கடை அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த நித்தீன் ( வயது 24) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்கண்ட 5 பேரையும் போலீசார் ஜாமினில் விடுதலை செய்தனர்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை…. பெண் கைது

திருச்சி ஆக10- திருச்சி டவுன் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது இபி ரோடு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி காயத்ரி (வயது 38) என்பதும் இவர் தான் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய இருந்தார் என்பது தெரிய வந்தது. இதையடுத்துஓட்டை போலீசார் காயத்ரி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து 600 கி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் மாயம்…

திருச்சி தில்லைநகர் கிழக்குத் தெருவை சேர்ந்தவர்வசந்தி இவரது மகன் சதீஷ்குமார் (வயது 37)இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் வீட்டிலிருந்த சதீஷ்குமார் திடீரென்று மாயமாகி விட்டார். இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசில் தாய் வசந்தி புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது..

திருச்சி -புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கேகே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் அங்குசென்று பார்த்தபோது ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்த பொழுது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது ஜே ஜே நகரை சேர்ந்த ராமன் என்பவர் மகன் வீர மணிகண்டன் என்பதும்,இவர்தான் அந்தப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்துகேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்து 100 போதை மாத்திரைகள் மற்றும் ஊசியை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!