புகையிலை விற்ற 2 வாலிபர்கள் கைது
திருச்சி, எடமலை பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் ஜங்ஷன் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக எடமலை பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர் .இதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் (39) என்பதும் அவர் அங்கு புகையிலை பொருட்கள் விற்றதும் தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்தனர் .அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல கரூர் பைபாஸ் சாலை அருகே புகையிலை பொருட்கள் விற்ற அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் ( 33 ) என்ற வாலிபரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 2 பேரையும் மாநகர போலீஸ் ஜாமினில் விடுவித்தனர்.
போதை மாத்திரைகள் விற்ற 7 வாலிபர்கள் கைது
திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக மாநகரப் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து அந்தந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர் அப்போது திருவரங்கம் மயானம் அம்பேத்கர் நகர் அருகே போதை மாத்திரை விற்ற திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி ரகுபதி ( 25, ) ரங்கநாதன் (25), மூலத் தோப்பு பகுதியை சேர்ந்த தினேஷ் பாபு (29 )ஆகிய 3 பேரை திருவரங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுடன் இருந்த 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். இவர்களிடம் இருந்து 50 போதை மாத்திரைகள், பாட்டில், 4 பஞ்சு உருளைகள், இரண்டு செல்போன்கள் மற்றும் இரண்டு டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். காந்தி மார்க்கெட் காமராஜ் நகர் அருகே போதை மாத்திரை விற்ற வடக்கு தாராநல்லூரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி படையப்பா ( 26 )என்ற வாலிபரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவரிடம் இருந்து 15 போதை மாத்திரைகள் இரண்டு ஊசிகள் மற்றும் ஒரு பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. பாலக்கரை தேவாலயம் அருகே போதை மாத்திரை விற்ற பாலக்கரை முதலியார் சத்திரத்தை சேர்ந்த பிரகாஷ் (26) மற்றும் செபாஸ்டின் சுனில் (24) ஆகிய இரண்டு பேரை பாலக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து எட்டு போதை மாத்திரைகள் இரண்டு ஊசி மற்றும் ஒரு பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது .இதே போல வயலூர் சாலை எம் எம் நகர் அருகே போதை மாத்திரை விற்ற அதே பகுதியைச் சேர்ந்த தன்சீர் அகமது ( 21 )என்ற வாலிபரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 8 போதை மாத்திரைகள் இரண்டு ஊசிகள் மற்றும் இரண்டு பாட்டில்கள் ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருச்சி ராம்ஜி நகர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக எடமலைப்பட்டி புதூர் போலீஸா இருக்கு தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி கஞ்சா விற்ற ராம்ஜி நகர் புதிய காட்டூர் பகுதியைச் சேர்ந்த பவித்ரன் (28 )என்ற வாலிபரை கைது செய்தனர் அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.

