Skip to content

7வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்… தீவிர சிகிச்சை

திருக்காட்டு பள்ளியில் வெறி நாய் கடித்து ஏழு வயது சிறுவன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
திருக்காட்டுப்பள்ளிவளப்பக்குடி மெயின்ரோட்டில் வசித்து வரும் காட்டுராஜா 35 இவரது மனைவி பாப்பாயி 30 இவர்களுக்கு சசிகுமார் என்ற ஏழு வயதுடைய மகன் இருக்கிறார். காட்டுராஜா மனைவியை விட்டு,விட்டு சென்றுவிட்டார். பாப்பாயி தன் சகோதரன் ராஜாவுடன் வசித்து வருகிறார். ராஜா மற்றும் பாப்பாயி இருவருக்கும் பார்வை குறைபாடு உள்ளது. இவர்கள் இருவரும் திருக்காட்டுப்பள்ளி நீர் வளத்துறை அலுவலகத்தில் தூய்மை பணிசெய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தூங்கியெழுந்த சசிக்குமார் தாயை பார்ப்பதற்கு காவேரியாற்று

படித்துறை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றிதிரிந்த வெறிநாய் ஒன்று சசிக்குமாரை துரத்தி கொடூரமாக கடித்து குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த மக்கள் சசிக்குமாரை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முதல் உதவி அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பகுதியில் நூற்றுக்கணக்கான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அன்றாடம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சிறுவனை வெறிநாய் கொடுரமாக தாக்கி குதறியது பொதுமக்களை மேலும் பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. நாய்களை கட்டுப்படுத்தி பொதுமக்களை காக்க அரசு, மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!