மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மூதாட்டி கங்கா (72). இவரது மகன் கமலேஷ் (46). கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட கமலேஷ் கடந்த 3 ஆண்டுகளாக டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கமலேசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மகன் கமலேசுக்கு தனது கிட்னியை தானமாக வழங்க கங்கா முன்வந்தார்.
கங்காவின் 2 கிட்னிகளும் நல்ல நிலையில் உள்ளன என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன் தினம் அறுவை சிகிச்சை மூலம் கங்காவின் ஒரு கிட்னி கமலேசுக்கு பொருத்தப்பட்டு இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.