இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.
பின்னர் திறந்த ஜீப்பில் சென்று, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா சாஸ்திரி ஆகியோர் காவல் துறையின்

அணிவகுப்பை பார்வையிட்டனர். மேலும் உலகெங்கும் சமாதானம் நிலவ வெண்புறாக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வெள்ளை புறாக்களை பறக்க விட்டனர். மேலும் குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் வகையில் தேசியக் கொடியின் வண்ணத்தில் ஆன வண்ண பலூன்களை பறக்க விட்டனர். பின்னர்

காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், சாரண, சாரணியர் ஆகியோரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொண்டனர்.
இதனையடுத்து 60 பயனாளிகளுக்கு 4 கோடியே 38 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட

உதவிகளையும், 41 காவலர்களுக்கு முதலமைச்சர் பதங்களையும், சிறப்பாக பணியாற்றிய 254 அரசு அதிகாரிகளுக்கு நற்சான்றிதழை வழங்கி மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி பாராட்டினார்.
பின்னர் தேசிய பற்றை பறைசாற்றும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்

நடைபெற்றது. சிறப்பாக நடனமாடிய மூன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுழற் கேடயங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். குடியரசு தின விழாவில் அரசு அதிகாரிகள்,

காவல்துறையினர், பள்ளி மாgணவ, மாணவகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

