இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். பின்னர் திறந்த ஜீப்பில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சென்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு, காவலர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். பின்னர் உலகெங்கும் சமாதானம்
நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்த வகையில் வெள்ளை புறாக்களை பறக்க விட்டும் இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறத்தைக் குறிக்கும் வகையில் பலூன்களை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி மற்றும் காவல் கண்காணிப்பாளர் பறக்க விட்டனர். இதனையடுத்து சிறப்பாக பணிபுரிந்த 200 அரசு அலுவலர்கள், காவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி வழங்கினார். இதன் பின்னர் 53 பயனாளிகளுக்கு 2 கோடியே 63 லட்சத்து 69 ஆயிரத்து 733 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி வழங்கினார். விழாவில் தேசியப்பற்றை விளக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுதும், மூவர்ண கொடியினை குறிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது.