சென்னை விமான நிலையத்தில் இருந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தினமும் வந்து செல்கின்றன. இதனால் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இந்நிலையில் சென்னையிலிருந்து மும்பை, ஹைதராபாத், புனே, தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று இதுவரையில் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் இருந்து அறிவிப்பு எதுவும் வரவில்லை. நிர்வாக காரணம் என்று மட்டும் சொல்லப்படுகிறது.
தொழில்நுட்ப கோளாறு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக கடந்த ஒரு வாரமாகவே விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 4 வருகை விமானங்கள், 4 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டது. முன்னறிவிப்பின்றி திடீரென விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.