ராஜஸ்தானில் திவ்யா(9) என்ற சிறுமி பள்ளியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென சுருண்டு விழுந்தார். என்ன ஆனது என அறிவதற்குள்ளாகவே மாரடைப்பு அவரை பறித்து சென்று விட்டது. 5 மாதங்களுக்கு முன்னர், திவ்யாவின் சகோதரன் அபிஷேக்கும் இதேபோல மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். சில மாத இடைவெளியில் 2 குழந்தைகள் ஒரே பாணியில் மரணமடைந்துள்ளது அக்குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

