Skip to content

மயிலாடுதுறை…. போக்சோ வழக்கில் வாலிபருக்கு 8ஆண்டு சிறை….

  • by Authour

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் காவல் சரகம் கஞ்சா நகரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்.31. இவர் கடந்த 2022ம் ஆண்டு 15 வயசு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து கார்த்திகை கைது செய்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேகர் ஆஜர் ஆகி வாதாடினார். பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த கார்த்திக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!