Skip to content

சாலை கடக்கும்போது கார் மோதி 80 வயது மூதாட்டி பரிதாப பலி

பொள்ளாச்சி – உடுமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி 5,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிவேகமாகச் செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று (பிப்ரவரி 24) கோலார்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே, வள்ளியம்மாள் (80) என்ற மூதாட்டி சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

அப்போது உடுமலை பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் ஓட்டி வந்த ஸ்குவாடா கார், எதிர்பாராத விதமாக மூதாட்டி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் வள்ளியம்மாளின் தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரைத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோ வழக்குப் பதிவு செய்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய தர்மராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!