சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், தனித்து போட்டி என்ற ஒற்றை தாரக மந்திரத்தை கையில் எடுத்து இந்த தேர்தலையும் நாம் தமிழர் கட்சி சந்திக்கிறது. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் இன்னும் கூட்டணியை உறுதி செய்யாத சூழலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்பதால், 234
தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது.
திருச்சியில் நடைபெற்ற மாநாட் டில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து சட்டமன்ற தேர்தல் போட்டிக்கான முதல் பச்சைக் கொடியை காட்டியிருக்கிறார். இந்த தேர்தலில் சீமான் காரைக்குடியில் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது. 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் வெளி ஆகியுள்ளன. அதில் என் ஜினீயர்கள் 40 பேர், டாக்டர்கள் 15 பேர், வக்கீல் 33 பேர், முதுகலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் 40 பேர், இளங்கலை, இளநிலை பட்டம் பெற்றவர்கள் 60 பேர் என 99% பேர் பட்டதாரிகளாக இடம்பெற்றுள்ளனர். மேலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களில் 25 சதவீதம் பேருக்கு இந்த தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 75% பேர் புது முகங்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.

