Skip to content

கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர்.

கோவை ரைசிங்’ என்ற தலைப்பில் கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு:-

  • கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்
  • கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
  • கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும்
  • ஏரிகளில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும்
  • கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கோவை நகர போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்படும்
  • கோவையில் புதிய புத்தொழில் ஹப் தொடங்கப்படும்
  • சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டப்படும்
  • மேற்கு சுற்றுவட்டச் சாலைப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு அதன் இணைப்புச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!