Skip to content

கரூரில் வெறும் தரையில் ஆம்லேட் ஆக மாறும் முட்டை…. அதிசயம்…

  • by Authour
கரூர் மாவட்டத்தில் வெப்பம் 107 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க கரூர்  மாவட்ட ஆட்சித் தலைவர்  அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிக்கையில், தமிழ்நாட்டின் கரூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் 23.4.2024 மற்றும் 24.4.2024 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் பொதுவாகவே ஆண்டுதோறும் மே மாதத்தில் அக்னி நட்சத்திர காலங்களில் வெயில் கொளுத்தி எடுக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மாத தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்து அதிகரித்து இன்று 107 டிகிரி பாரான் ஹிட்ஸ் வரை உயர்ந்து கொண்டே இருப்பது பொதுமக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் தாந்தோணி மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் வெயில் தாக்கத்தால் வெறும் தரையில் முட்டையை உடைத்து ஊற்றினால்  சில நிமிடங்களிலேயே ஆம்லெட் ஆக மாறுகிறது. இதுவே கரூர் மாவட்டத்தில் எவ்வளவு வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை சான்றாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!