மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கொப்பியம் என்ற பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நான்கு பேர் காரில் சாராயம் கடத்தி சென்ற போது நாகை மாவட்ட நடமாடும் சோதனை சாவடி பிரிவை சேர்ந்த போலீசார் வழிமறித்தனர். அந்த சம்பவத்தின் போது டூவீலரில் வழிமறித்த ஏட்டு ரவிச்சந்தின் மீது மர்ம நபர்கள் காரை மோதி விட்டு சென்றனர். இந்த சம்பவத்தில் மார்பு எலும்புகள் உடைந்து படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் சென்னை போரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆனைக்காரன் சத்திரம் போலீசார் மீன்சுருட்டியைச் சேர்ந்த கலைச்செல்வன், சங்கர், ராமமூர்த்தி திருவிடைமருதூர் புளியம்பட்டியைச் சேர்ந்த கருணாகரன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கலைச்செல்வனையும் கருணாகரணையும் காப்பாற்றும் முயற்சியாக ஆள் மாறாட்டம் செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜரான செல்வம் செல்வகுமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகினர். இந்நிலையில் இன்று நீதிபதி விஜயகுமாரி அளித்த தீர்ப்பில் முதல் நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதமும் கட்ட தவறினால் மூன்று மாத சிறை தண்டனை , பிரிவு 353க்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை பிரிவு 201 க்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை, பிரிவு 205க்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பிரிவு 4(1)a தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆள் மாறாட்டம் செய்த செல்வம், செல்வக்குமார் ஆகிய இருவருக்கும் பிரிவு 201ன் படி 7வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் 2ஆயிரம் அபராதம் விதித்து சட்டப்பிரிவு 205, 3ஆண்டுகளும் 353 பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகளும் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார்
