திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் திசையன்விளை அருகே கரைச்சுத்து புதுாரில் அவரது வீட்டின் அருகே உள்ள தனது தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். பிணமாக கிடந்த ஜெயக்குமாரின் கை, கால்கள் மின் ஒயரால் கட்டப்பட்டும், உடல் கருகிய நிலையிலும் இருந்தது. இவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் , தொழில்போட்டி, அரசியல் முன்விரோதம் என பல கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கொலையா தற்கொலையா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் முழு விவரம் தெரியவரும். உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரித்து வந்தாலும் அவர் எழுதியதாக கூறப்படும் 5 பக்க கடிதத்தில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரின் பெயரை குறிப்பிட்டும் அவர்கள் தான் தன்னுடைய சாவுக்கு காரணம் என கட்சி லெட்டர் பேடில் எழுதி வைத்திருந்தார். இந்த கடிதம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது மருமகன் ஜெயபாலுவுக்கு , காங்., தலைவர் ஜெயக்குமார் ஒரு கடிதம் எழுதியுள்ள விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு 14 நபர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை குடும்பத்தில் யாரும் பழிவாங்க வேண்டாம். சட்டம் தன் கடமையை செய்யும். நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியனிடம் ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டு காசோலையை திரும்பப் பெற வேண்டும். இடிந்தக்கரையை சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும். தனது பிரச்னையை மனதில் வைத்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களை யாரும் பழிவாங்க வேண்டாம். மகள் கத்ரீன் திருமணத்தை அனைவரும் சிறப்பாக நடத்தி கொடுத்தீர்கள். என் அன்பு உங்கள் மீது எப்போதும் உண்டு. மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் என்னை மன்னிக்கவும் இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மர்மசாவு.. மருமகனுக்கு எழுதப்பட்ட மற்றொரு கடிதத்தால் குழப்பம்..
- by Authour
