திருச்சி-குளித்தலை சாலையில் உள்ள காவல்காரன்பட்டி என்ற இடத்தில் ஒரு முட்புதரில் இன்று குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது முட்புதரில் ஒரு ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தை பிறந்து அரை மணி நேரமே ஆகியிருக்கும். அதற்குள் அந்த குழந்தையை ஏன் முட்புதரில் வீசினார்கள் என்று தெரியவில்லை. உடனடியாக அந்த குழந்தையை திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அந்த குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த குழந்தையின் தாயை தேடி வருகிறார்கள். முறைதவறி பிறந்தததால் குழந்தை வீசப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.
