கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் பகுதி கழக செயலாளர்கள், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் எல்லாம் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த முதலமைச்சர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.
கோவை மக்கள் அளித்த வரவேற்பு தொடர்பாக அவரிடம் கேட்டபோது, மக்கள் பல கோரிக்கைகளை வைத்துள்ளார்கள் அவற்றை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்துள்ளோம். மக்கள் வரவேற்பு தொடர்பாக கேட்டபோது 2026″இல் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக மக்களின் வரவேற்பு இருந்தது என அவர் கூறினார்.
மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்கள் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன் என தெரிவித்த முதலமைச்சர் தங்க நகை தொழில் பூங்கா தொடர்பாக கோரிக்கையைப் பரிசளித்து வருகிறோம் என தெரிவித்தார். கட்சி ரீதியாக மாவட்டம் விரிவுபடுத்தப்படுமா என்பது குறித்து கேட்ட போது அது குறித்து கூற முடியாது என தெரிவித்தார்.