திருச்சி ஸ்ரீரங்கம் ஹீலவாசல் டிரைனேஜ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்து( 73). இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார. 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தபோதிலும் முத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி லட்சுமி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கஞ்சா விற்பனை… 2 சிறுவர்கள் கைது
திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கல்லாங்குத்து ரயில்வே கேட் அருகாமையில் ரோந்து சென்றார் அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் அவர்கள் வசம் இருந்த 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர் மேலும் துவாக்குடி மாரியம்மன் கோவில் தெரு செடி மலை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் திருவரம்பூர் கீழக்குமரசபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என இரண்டு பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.