கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது.
இந்நிலையில், கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தில் ஈஸ்வரனுக்கு முன்னர் வீற்று அருள்பாலிக்கும் நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு

அபிஷேகங்கள் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், கரும்புச்சாறு, திருநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அருகம்புல், எலுமிச்சை பலங்கள், சந்தனங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக கோபுர ஆரத்தி, கும்ப ஆரத்திகளை தொடர்ந்து கற்பூர ஆரத்திகளும், ஷோடசம்ஹாரங்களும் நிகழ்த்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

