Skip to content

பணக்காரர்கள் பட்டியல்…..11வது இடத்துக்கு சரிந்த அதானி

  • by Authour

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பாா்த்தது, வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது.

அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு தொடர் வீழ்ச்சியடைந்தது. கவுதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலிலிருந்து கவுதம் அதானியின் இடம் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதானி குழுமப் பங்குகள் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் கடும் சரிவுடன் வணிகமானதைத் தொடர்ந்து அதானியின் சொத்து மதிப்பு சரிந்து, ஏழாம் இடத்திலிருந்து எட்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

போர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் பணக்காரர்களின் பட்டியலில், திங்கள்கிழமை வணிகத்தின் போது, அதானியின் சொத்து மதிப்பு மேலும் 8.5 பில்லியன் டாலர்கள் சரிந்து 88.2 பில்லியன் டாலர்களாக குறைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில், 8ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்த போது, அதானி, உலகப் பணக்காரர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார்.

அதன்பிறகும் கூட, மிக நீண்ட காலம் மூன்றாவது இடத்திலேயே அதானி நீடித்திருந்தார். ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி, 83 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார். தற்போது அம்பானிக்கும் அதானிக்கும் இடையேயான சொத்து மதிப்பு வித்தியாசம் வெறும் 4 பில்லியன் டாலர்களாக உள்ளது. புளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸ் படி, கடந்த 3 வர்த்தக நாளில் அதானியின் சொத்துமதிப்பு 3400 கோடி டாலர் அளவுக்கு சரிந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அதானியின் மொத்த சொத்துமதிப்பு 8440 கோடி டாலராக உள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்திலிருந்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் 12-வது இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 8220 கோடி டாலராக உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!