Skip to content

அரியலூர்… விறகில்லா பொங்கல் வைத்து வித்தியாசமாக கொண்டாடிய கிராம மக்கள்…

அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் கிராமத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் கிராம மக்கள் விவசாயிகள் தங்களது ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரித்து ம் மாட்டுவண்டி பயணத்தை இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டும் வகையிலும் புறா பந்தயம் பானை உடைத்தல் அடுப்பில்லா நெருப்பில்லா பொங்கல் என பல்வேறு நிகழ்வுகளை நடத்தினர். இதில் பாரம்பரிய முறையில் புத்தம் புது பானை 5 வைத்து

பஞ்சபூதங்களையும் வணங்கும் விதமாக பானையை சுண்ணாம்பு நீரில் நனைத்து பாரம்பரிய ரக நெல்லை ஊறவைத்து எடுத்த நெல்லை வறுத்து இடித்து கெட்டி அவலாக மாற்றி அதனை ஓரிரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் பருத்தி துணியால் இறுக்கிப் பிழிந்து வடிகட்டி சோறு போல வந்தவுடன் அதில் ஊறவைத்த வெல்லத்தினை தேவையான அளவு தண்ணீர் கலந்து பாகுபோல தயாரித்து பருத்தி துணியால் வடிகட்டி ஏழைகளின் முந்திரி பருப்பு என அழைக்கப்படும் வறுத்த நிலக்கடலையை பொடி செய்து அதனையும். சேர்த்து பிறகு கல்லில் நசுக்கிய ஏலக்காய் தூள் சிறிதளவு தேவையான அளவு உலர் திராட்சை கலந்தவுடன் அடுப்பில்லாமல் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எளிதில் சீரணம் ஆக கூடிய பொங்கல் தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

error: Content is protected !!