கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலம் வெளியே போக்குவரத்து சீர் செய்ய காலை முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டு வருவார். அப்போது வாகனங்கள் வராத போது போக்குவரத்து காவலர் காத்திருக்க கூண்டு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் அது இரும்பு கூண்டு எனபதாலும் மரத்தின் நிழல் இல்லாததால் வெப்ப தாக்கத்திலேயே காவலர் அங்கு காத்திருப்பார். இந்நிலையில் ஆணையர் அலுவலத்தில் பாதுகாப்பு பணியல் இருக்கும் போக்குவரத்து காவலருக்கு
Video Player
00:00
00:00
ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் புதிய கூண்டு அமைக்கப்பட்டது. அதில் ஃபேன், லைட்டுகள், பேப்பர் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வைக்கும் ரேக்குகளுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கூறை தர்மாக்கோளால் அமைத்து வெப்ப இறங்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.