Skip to content

ஓய்வு ஆசிரியைக்கு சரமாரி கத்துக்குத்து-மயிலாடுதுறை இன்ஜினியர் கைது

மயிலாடுதுறையை அடுத்த மதுரா நகர் டெலிகாம் நகர் 2-வது கிராஸ் பகுதியில் வசிப்பவர் நிர்மலா (60)  ஓய்வு பெற்ற ஆசிரியை, இவரது எதிர் வீட்டில் வசிக்கும் பிரேம் (24) என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் இன்று காலை சிறிய கத்தியைக் கொண்டு நிர்மலாவின் வயிறு உள்ளிட்ட 15-க்கு மேற்பட்ட இடங்களில் சரமாரி குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த நிர்மலா மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது.   மயிலாடுதுறை போலீசார் பிரேமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!