Skip to content

திருச்சியில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் மறியல் போராட்டம்…

ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்த அலுவலர் குழுவை அரசு திரும்ப பெற கோரியும், படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப் கோரியும், பிற மாநிலங்களில் சிபிஎஸ் திட்ட ஊழியர்களுக்கு வழங்குவது போல் பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இன்பராஜ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாநில துணைத்தலைவர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் லட்சுமணன் போராட்டத்தை துவக்கி வைத்து விளக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!