Skip to content

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா… யுகேஜி மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்…

கோவை இடையர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் யு.கே.ஜி பயின்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள் நடத்த தமிழ்நாடு அரசு 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தடாகம் சாலை இடையார்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தலட்சுமி தலைமை வகித்தார். மாமன்ற உறுப்பினர்கள் சம்பத் தமிழ்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும் பள்ளியின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். ஆண்டு விழாவை முன்னிட்டு, யு.கே.ஜி முடித்த மாணவர்களுக்கு பட்டங்களுடன், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தனிநபர் மற்றும் குழுவினர் என பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் மாறுவேடங்கள் மற்றும் கண்கவர் ஆடைகள் அணிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்கள் சிலர் ஆங்கிலத்தில் உரையாற்றியது, பெற்றோர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

error: Content is protected !!